• August 13, 2025
  • NewsEditor
  • 0

ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் `கூலி’ திரைப்படம் திரையரங்குகளில் நாளை வெளியாகிறது.

தமிழ்நாடு, தென்னிந்தியா, இந்தியா கடந்து உலக அளவில் ரஜினி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது கூலி.

ரஜினி – லோகேஷ் கனகராஜ் – கூலி

அதுமட்டுமல்லாமல், ரஜினியின் முதல் படமான அபூர்வ ராகங்கள் (ஆகஸ்ட் 15, 1975) திரைப்படம் வெளியாகி 50 ஆண்டுகள் நிறைவடையும் நாளில் கூலி திரைப்படம் வெளியாவதால், ரஜினியின் 50 ஆண்டுக்கால திரைப்பயணத்தையும் சேர்த்து ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்திருக்கிறது கூலி.

இந்த நிலையில், ரஜினியின் 50 ஆண்டு திரைப்பயணத்துக்கு அவரது நண்பரும், நடிகரும், எம்.பி-யுமான கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கமல், “சினிமாவில் அரை நூற்றாண்டு கால திறமையைக் குறிக்கும் வகையில், என் அன்பு நண்பர் ரஜினிகாந்த் இன்று சினிமாவில் 50 ஆண்டுகளைக் கொண்டாடுகிறார்.

நமது சூப்பர் ஸ்டாரை அன்புடனும், பாராட்டுடனும் கொண்டாடுகிறேன்.

இந்தப் பொன் விழாவிற்கு ஏற்றவாறு கூலி உலகளாவிய வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன்” என்று ட்வீட் செய்திருக்கிறார்.

அதேபோல், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், “கூலி படம் எனது திரைப் பயணத்தில் எப்போதும் ஸ்பெஷலான படம். அதற்கு ஒரே காரணம் நீங்கள்தான்.

உங்களுடன் படப்பிடிப்பில் மற்றும் வெளியில் பகிர்ந்த உரையாடல்கள், இந்த வாய்ப்பு எல்லாம் என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணங்கள். We Love You Thalaivaa” என நன்றியும், வாழ்த்தும் தெரிவித்திருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *