
நடிகர் ரஜினிகாந்த் தனது சினிமா பயணத்தில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இதையொட்டி திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர்.
அந்த வகையில் கவிஞர் வைரமுத்து கவிதை வழியாக தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். அவரது தனது சமூக வலைத்தளப் பக்கத்தில்,
“50 ஆண்டுகள்
ஒரே துறையில்
உச்சத்தில் இருப்பது
அபூர்வம்
ரஜினி
நீங்கள் ஓர் அபூர்வ ராகம்
புகழும் பொருளும்
உங்கள்
உழைப்புக்குக் கிடைத்த
கூலி
தொடரட்டும்
உங்கள் தொழில்
நிலைக்கட்டும்
உங்கள் புகழ்
“இளமை இனிமேல் போகாது
முதுமை எனக்கு வாராது” என்று
முத்து படத்தில் எழுதிய
முத்திரை வரியால்
வாழ்த்துகிறேன்” என வாழ்த்தியிருக்கிறார்.
50 ஆண்டுகள்
ஒரே துறையில்
உச்சத்தில் இருப்பது
அபூர்வம்ரஜினி
நீங்கள் ஓர் அபூர்வ ராகம்புகழும் பொருளும்
உங்கள்
உழைப்புக்குக் கிடைத்த
கூலிதொடரட்டும்
உங்கள் தொழில்
நிலைக்கட்டும்
உங்கள் புகழ்"இளமை இனிமேல் போகாது
முதுமை எனக்கு வாராது" என்று
முத்து படத்தில் எழுதிய
முத்திரை… pic.twitter.com/dtIfpmi3wB— வைரமுத்து (@Vairamuthu) August 13, 2025
ரஜினிகாந்த் 1975ம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 50 ஆண்டுகளுக்குப் பிறகு கிட்டத்தட்ட அதே நேரத்தில் வெளியாகிறது கூலி திரைப்படம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தில் நாகர்ஜுனா, ஆமிர் கான், சௌபின் சாஹிர், உபேந்திரா, சத்யராஜ், ஷ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அடுத்த சில நாள்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்திருக்கின்றன. விக்ரம், லியோ போன்ற ஹிட் படங்களைக் கொடுத்த லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக ரஜினிகாந்த்துடன் இணைவதனால் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…