
சென்னை: சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தையொட்டி சென்னை பெருநகரில் 9,100 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறை தரப்பில் வெளியான செய்திக்குறிப்பில், ‘வருகிற 15.08.2025 அன்று 79வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருணின் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.