
காங்கோ மழைக்காட்டில் உள்ள கின்ஷாசாவில் இருந்து யானைகள், ஒட்டகச்சிவிங்கிகள், மான்கள் மற்றும் சிங்கங்கள் போன்ற பொம்மை விலங்குகள், இரண்டு கண்டங்களைக் கடந்து பயணித்திருக்கின்றனர்.
ஆப்பிரிக்காவின் காங்கோ மழைக்காட்டில் உள்ள கின்ஷாசாவில் இருந்து தொடங்கிய இந்தப் பயணத்தில் யானை, ஒட்டகச்சிவிங்கி, மான், சிங்கம் போன்ற உயிரோட்டமான பொம்மை விலங்குகளின் கூட்டம் இடம்பெற்று 20,000 கி.மீ தூரம் பயணித்து ஒரு அசாதாரண முயற்சியை மேற்கொண்டுள்ளது.
மறுசுழற்சி செய்யப்பட்ட கார்டுபோர்டுகளால் உருவாக்கப்பட்ட இந்த பொம்மைகள், ஐரோப்பாவில் தங்கள் பயணத்தை முடித்துள்ளன.
காலநிலை மாற்றத்தால் இடம்பெயரும் விலங்குகள் மற்றும் மக்களின் நிலையை பிரதிபலிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டம், காலநிலை நெருக்கடியை புள்ளிவிவரங்களால் இல்லாமல் உணர்ச்சிகரமான அனுபவமாக பொது மக்களுக்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தப் பயணம் ஒரு காட்சியாக மட்டுமல்லாமல், காலநிலை பேரழிவுகளால் ஏற்படும் உண்மையான இடப்பெயர்வை பிரதிபலிக்கும் ஒன்றாக மாறியிருக்கிறது.
இந்த பெரிய பொம்மைகளை பொது இடங்களுக்கு கொண்டு வருவதன் மூலம், காலநிலை நெருக்கடியை உலகளாவிய பார்வையாளர்களுக்கு உணர்ச்சிகரமாகவும், மனதுக்கு நெருக்கமாகவும் மாற்றுவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டம், 2021ஆம் ஆண்டு உலகளாவிய அகதிகள் நெருக்கடி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 15 நாடுகளில் பயணித்த 12 அடி உயர அகதி சிறுமி பொம்மையான லிட்டில் அமலினை உருவாக்கிய குழுவான தி வாக் புரொடக்ஷன்ஸால் உருவாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.