• August 13, 2025
  • NewsEditor
  • 0

கலிபோர்னியாவின் சான்டா ரோசாவில் உள்ள `சோனோமா கவுண்டி’ கண்காட்சியில் கடந்த வாரம் நடைபெற்ற உலகின் மிக அவலட்சணமான நாய்கள் போட்டியில், இரண்டு வயது மதிக்கதக்க முடி இல்லாத பிரெஞ்சு புல்டாக் பெடுனியா என்ற நாய் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ஓரிகனின் யூஜீனைச் சேர்ந்த இந்த நாயும் அதன் உரிமையாளர் ஷானன் நைமனும் ரூ.4.3 லட்சம் ($5,000) பரிசை வென்றனர்.

கடந்த ஆண்டு, வைல்ட் தாங் என்ற பெக்கிங்கீஸ் இன நாய், ஏற்கெனவே ஐந்து முறை இந்தப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றது.

பிரெஞ்சு புல்டாக் பெடுனியா

உலகின் மிக அவலட்சணமான நாய் போட்டியின் பின்னணி

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்தப் போட்டி, “எல்லா நாய்களையும் சிறப்பாகவும் தனித்துவமாகவும் காண்பிக்க வேண்டும் அதன் குறைபாடுகளை பொருட்படுத்தாமல் கொண்டாடப்பட வேண்டும்

இந்தப் போட்டி, அனைத்து விலங்குகளையும் அன்புடன் ஏற்றுக்கொள்வதற்கான முக்கியத்துவத்தையும், தத்தெடுப்பதன் நன்மைகளையும் வலியுறுத்துகிறது,” என்று கூறப்பட்டுள்ளது.

1971ஆம் ஆண்டு ரோஸ் ஸ்மித் என்பவர் சமூகத்தின் ஓல்ட் அடோப் அசோசியேஷனுக்காக நிதி திரட்டுவதற்காக இந்த நிகழ்வை தொடங்கினார். 1988 முதல் கண்காட்சியாக இந்த நிகழ்வு நடத்தப்பட்டு வருகின்றது.

இந்நிகழ்வு நாய்களின் பாதுகாப்பையும், அவற்றின் தோற்றம் எப்படி இருந்தாலும் மக்கள் தத்தெடுக்கவும் ஊக்குவிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

`World’s Ugliest Dog: பிரெஞ்சு புல்டாக் பெடுனியா

பிரெஞ்சு புல்டாக் நாயின் ஆயுட்காலம்

பிரெஞ்சு புல்டாக் (French Bulldog) நாய்கள், தங்கள் தனித்துவமான தோற்றத்தால் உலகளவில் பிரபலமடைந்துள்ளன. இந்த இனத்தின் நாய்கள் சிறிய, குறுகிய மூக்கு, பளபளப்பான மேல் தோல் மற்றும் அமைதியான பண்புகளால் வீட்டு செல்லப்பிராணிகளாக விரும்பப்படுகின்றன. இவை பிரான்ஸைச் சேர்ந்தவை என்றாலும், இங்கிலாந்தில் தோன்றிய புல்டாக் இனத்தின் மூலம் வந்ததாக கூறப்படுகிறது.

இவற்றின் ஆயுட்காலம் 10-12 ஆண்டுகள் என கூறப்படுகிறது. இவற்றின் விலை ₹50,000 முதல் ₹1,50,000 வரை இருக்கலாம் என சென்னையில் உள்ள நாய் வளர்ப்பு மையங்கள் தெரிவிக்கின்றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *