
பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம்சாட்டியும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களையும், சட்டரீதியிலான போராட்டத்தையும் முன்னெடுத்திருக்கிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ராகுல் காந்திக்கும் ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர்.
அவ்வகையில் இன்று நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இது குறித்துப் பேசியிருக்கும் மு.க. ஸ்டாலின், “தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் தேர்தல் நடைமுறைகளைத் தொடங்கும் முன்பே தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்க வேண்டும். தேர்தல் ஆணையம் அரசியல் சாயம் பூசிக் கொண்டு மத்திய பாஜக அரசுடன் கைகோர்த்து நிற்கிறது” என்று பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs