
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
உலகில் மக்கட்தொகை கூடக்கூட கட்டிடங்களும் தங்கள் உயரத்தைக் கூட்டிக் கொள்ள ஆரம்பித்து விட்டன.முன்பெல்லாம் 50 மாடி,100 மாடிக் கட்டிடங்களை
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மட்டுமே காண முடியும் என்ற நிலையிருந்தது.
அப்புறம் அது மெல்ல வளர்ந்து பல நாடுகளுக்கும் பரவி விட்டது. பல மாடிக் கட்டிடங்கள் அதிக அளவில் முளைக்க ஆரம்பித்து விட்டன. இது எல்லா வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளுக்கும் பொருந்தும்.
கட்டிடங்கள் ஹரிசான்டல் வளர்ச்சியிலிருந்து (Horizontal Growth) வெர்டிகல் வளர்ச்சி(Vertical Growth)க்கு மாறி விட்டன.இரண்டிலும் சாதக, பாதகங்கள் உண்டு.
வெர்டிகல் வளர்ச்சி விரைந்து நடைபெற பெரிதும் உதவுவது லிப்ட்கள் என்றால் அது மிகையில்லை.
சமீபத்தில் சிங்கப்பூர்,மலேசியா போன்ற நாடுகளுக்குச் செல்ல நேர்ந்தது.
அங்கெல்லாங்கூட அதிக உயரம்கொண்ட பில்டிங்குகள் நிறைய வந்து விட்டன. மலேசியாவில் 36 மாடிகள் கொண்ட ஒரு உயரமான பில்டிங்கின் 12 வது மாடியில் இரண்டு நாட்கள் தங்கினோம்.பன்னிரண்டாவது மாடியில் நாங்கள் தங்கியது இரண்டு பெட்ரூம்கள் கொண்ட ஒரு வீட்டில்தான்.ஏர் பிஎன்பி (Air bnb) என்றும் ஹோம் ஸ்டே (Home Stay) என்றும் அழைக்கப்படும் இம்முறையில்,வீட்டு உரிமையாளர்கள்,ஆன்லைனில் தங்கள் வீடுகளை 2,3 நாட்களுக்குக்கூட வாடகைக்கு விடுகிறார்கள். எல்லாமே ஆன்லைன் ட்ரான்சாக்ஷன்தான்.
அப்படித் தங்கியிருக்கையில், நம்மிடம் ஒரு கார்டைக் கொடுத்து விடுகிறார்கள்.
லிப்டின் உள்ளே சென்றதும் அங்குள்ள சென்சாரில் நம் கார்டைக் காட்டினால் மட்டுமே லிப்ட் இயங்க ஆரம்பிக்கிறது. இயங்கும் அந்த லிப்ட் நமது ப்ளோருடன்
(12 வது மாடி)நின்று விடுகிறது. அதற்குமேல் நம்மால் செல்ல முடியாது. ஒரு வேளை 36 வது மாடிக்காரர் நம்முடன் லிப்டில் வந்தால் மட்டுமே நாம் மேற்கொண்டு செல்ல இயலும்.இந்தக் கட்டுப்பாடு மேலே செல்லும்போது மட்டுமே! இறங்கி வருகையில்
சாதாரண லிப்ட்கள் போலவே இயங்குகின்றன.
அதே முறை, சிங்கப்பூர் ஸ்டார் ஹோட்டலில் தங்கும்போதும் பின்பற்றப்படுவதைக் கண்டோம். அறையில் தங்குபவர்கள்கூட தேவையற்ற இடங்களுக்குச் செல்வதை இம்முறை தடுப்பதுடன்,சரியான பாதுகாப்புக்கும் வழி வகுக்கிறது.
உலகின் பல நாடுகளைச் சுற்றியபோதும்,வேறு எந்த நாட்டிலும் இந்தக் கட்டுப்பாட்டு முறையை லிப்டில் யாம் கண்டதில்லை.நமது நாட்டில் இனிமேல்தான் இது புழக்கத்திற்கு வருமென்று தோன்றுகிறது. சீனாவில் இம்முறை கையாளப்படுகிறதாவென்று நமக்குத் தெரியவில்லை. ஏனெனில் இன்றைய தேதியில் விஞ்ஞான முன்னேற்றங்களைக் கையாள்வதில் அந்நாடு முதலிடம் வகித்து வருகிறது.
எது எப்படியோ,சில விஞ்ஞான சாதனைகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன;
நமது வாழ்க்கையை எளிதாக்குகின்றன;அந்த வகையில் லிப்ட்கள் ஒரு வகையில் நம்மை உயரத்திற்குக் கொண்டு செல்கின்றன!உயரத்திற்குக் கொண்டு செல்வதோடு
பாதுகாப்பையும் வழங்க முற்பட்டிருக்கின்றன.இதனைக் கண்டு பிடித்தவர்களுக்
கெல்லாம் நன்றி சொல்லும் கடமை நமக்கிருக்கிறது!
-ரெ.ஆத்மநாதன்,
கூடுவாஞ்சேரி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!