• August 13, 2025
  • NewsEditor
  • 0

திருமலை: திருப்ப​தியி​லிருந்து அலிபிரி வழி​யாக திரு​மலைக்கு செல்ல இனி ஃபாஸ்​டேக் கட்டாயம் என திரு​மலை திருப்​பதி தேவஸ்தானம் உத்​தர​விட்​டுள்​ளது. திருப்​பதி ஏழு​மலை​யானை தரிசனம் செய்ய நாடு முழு​வ​தி​லும் இருந்து வரும் பக்​தர்​கள் ரயில் அல்​லது விமானத்​தில் வந்​தா​லும், அவர்​கள் கார், ஜீப், வேன் போன்​றவற்​றின் மூலம் திரு​மலைக்கு செல்​கின்​றனர். மேலும் பலர் தங்களது சொந்த கார்​கள் மூலம் குடும்​பத்​தா​ருடன் திரு​மலைக்கு வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், வரும் 15-ம் தேதி முதல் திரு​மலைக்கு வாக​னங்​களில் வரும் பக்​தர்​கள் கண்​டிப்​பாக அவர்​களின் வாக​னங்​களில் ஃபாஸ்​டேக் இருக்​கும்​படி பார்த்து கொள்ள வேண்​டும் என தேவஸ்​தானம் வெளிட்​டுள்ள அறிக்​கை​யில் தெரி​வித்​துள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *