
சென்னை: பொது இடங்களில் புகைப்பிடிப்பதையும், மது அருந்துவதையும் தடுக்கும் விதமாக கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: பொது இடங்களில் புகைப்பிடிப்பதால் ஆண்டுக்கு சுமார் 13.20 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும், அருகில் இருப்பவர்கள் சுவாசிப்பதால் ஆண்டுக்கு சுமார் 2.20 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கும் செய்திகள் கவலைக்குரியது.