
பூஜா ஹெக்டே சமீபத்தில் சூர்யாவுடன் ‘ரெட்ரோ’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற்றிருந்தார்.
அதனைத் தொடர்ந்து ‘கூலி’ திரைப்படத்தில் ‘மோனிகா’ பாடலில் நடனமாடி டாக் ஆஃப் தி டவுனாக மாறியிருக்கிறார்.
சமீபத்தில் ‘தி ஹாலிவுட் ரிப்போர்டர்’ ஊடகத்தின் இந்தியப் பதிப்பிற்கு அளித்த பேட்டியில், நடிகை பூஜா ஹெக்டே தான் பெற்ற எதிர்மறை விமர்சனங்களால் மிகவும் பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
அந்தப் பேட்டியில் பூஜா ஹெக்டே, “இப்படி பணம் கொடுத்து வளர்ந்து வரும் நபர்களைக் குறிவைத்து அவமதிக்க முயல்வது எனக்கு மிகுந்த அதிர்ச்சியளிக்கும் விஷயமாக இருக்கிறது.
இது என் பெற்றோரையும் மிகவும் பாதிக்கிறது. ஆரம்பத்தில் இதைப் பற்றி நான் பெரிதாகக் கவலைப்படவில்லை.
ஒருவர் முயற்சிகளை மேற்கொண்டு நம்மைக் கீழே இழுக்க முயன்றால், நாம் அவர்களைவிட மேலே இருக்கிறோம் என்பதே பொருள்.
அதனால், முதலில் இதை ஒரு பாராட்டாகவே எடுத்துக்கொண்டேன். ஆனால், எல்லை மீறிய அர்த்தமற்ற விமர்சனங்கள் வந்துகொண்டே இருக்கின்றன.
செலவழித்து இந்தச் செயலை செய்கிறார்கள் என்பதை என் குழுவின் மூலம் அறிந்துகொண்டேன்.

மேலும், இந்தச் செயலில் செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள் தீவிரமாக ஈடுபடுகின்றன. சில மீம் பேஜ்களும், ‘பணம் கொடுத்தால் எதிர்மறை பதிவுகளை அகற்றிவிடுவோம்’ என்று கூறியது அதிர்ச்சியளித்தது.
இதன் மூலம், திரைப்படத் துறையின் மறைமுகமான இருண்ட யுக்திகள் குறித்து எனக்குத் தெரியவந்தன.
ஆனால், இந்த எதிர்மறை விமர்சனங்கள் அனைத்தும் ரசிகர்கள் நேரில் காட்டும் தூய்மையான அன்பைக் காணும்போது உருகி மறைந்துவிடுகின்றன.
இந்த அன்பே உண்மையான சான்று. இணையத்தில் வரும் விஷத்தன்மையுள்ள கருத்துக்கள் பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள் மற்றும் சிலர் உருவாக்கும் போலிக் கணக்குகளால் உருவாக்கப்படுபவைதான்.” என்று சற்று உணர்ச்சிவசப்பட்டு குறிப்பிட்டார் பூஜா ஹெக்டே.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…