
சென்னை: இதுவரை ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட்டுவிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்துக்கான தொழில் முதலீடுகளை திரட்டுவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழு, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குச் செல்லவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.