
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கூலி’, ஆக.14-ம் தேதி வெளியாகிறது. இதில், சத்யராஜ், ஆமீர்கான், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், சவுபின் சாஹிர், உபேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
அவர் இசையில் இடம்பெற்றுள்ள ‘மோனிகா…’ என்ற பாடல் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் பூஜா ஹெக்டே ஆடியுள்ளார். இந்தப் பாடல் வைரலான நிலையில், ரசிகர்கள் பலர், பிரபல ஹாலிவுட் நடிகை மோனிகா பெலுச்சிக்கு இந்தப் பாடலை அனுப்பி வந்தனர். மோனிகா பெலுச்சியின் தோழி மெலிட்டா மூலமாக மூலமாக அவருக்கு இப்பாடல் சென்றுள்ளது. அதைக் கேட்ட மோனிகா, அந்தப் பாடலை, தான் மிகவும் ரசித்ததாகக் கூறியுள்ளார்.