
அறிமுக நடிகர் ஆதித்யா மாதவன், போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் படம், ‘அதர்ஸ்’. மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் படமான இதில், கவுரி ஜி கிஷண், மருத்துவராக நடித்துள்ளார். அஞ்சு குரியன், முனிஷ் காந்த், ஹரீஷ் பெரேடி, மாலா பார்வதி, ஜகன், ஆர்.சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அபின் ஹரிஹரன் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். கிராண்ட் பிக்சர்ஸ் முரளி தயாரிக்கும் இந்தப் படத்தை கார்த்திக் ஜி இணைத் தயாரிப்பு செய்கிறார். செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கும் இதன் முதல் தோற்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.