
சென்னை: தவறான கணக்கீடு செய்யும் கணக்கீட்டாளர் மீது துணை நிதி கட்டுபாட்டாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து துணை நிதி கட்டுபாட்டாளர்களுக்கு நிதி இயக்குநர் எழுதிய கடிதம்: துணை நிதி கட்டுப்பாட்டாளர்கள் தங்கள் வட்டங்களில் நடக்கும் பணிகள் குறித்த விவரங்களை அந்தந்த தலைமை பிரிவு அலுவலங்களுக்கு தெரிவிக்க வேண்டும். இருப்பினும் அவ்வப்போது மின்கணக்கீட்டு பணியாளர்கள் தவறாக மின்கணக்கீடு செய்வதால் வாரியத்துக்கு அவப்பெயர் ஏற்படுகிறது.