
புதுடெல்லி: கடந்த 2003 முதல் 3.5 லட்சம் ஓலைச்சுவடிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: ‘ஓலைச்சுவடி பாரம்பரியத்தின் மூலம் இந்தியாவின் அறிவு மரபை மீட்பது' என்ற தலைப்பில் முதல் சர்வதேச ஓலைச்சுவடிகள் பாரம்பரிய மாநாடு மத்திய அரசு சார்பில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது.