
சென்னை: திருவனந்தபுரத்தில் இருந்து 5 எம்பிக்கள் உட்பட 150 பயணிகளுடன் டெல்லிக்கு புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானியின் திறமையால் உயிர் பிழைத்ததாக காங்கிரஸ் எம்பி வேணுகோபால் தெரிவித்தார்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் நேற்று முன்தினம், இரவு 8.17 மணிக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் எம்பி வேணுகோபால், கொடி குன்னில் சுரேஷ், அடூர்பிரகாஷ், கே.ராதாகிருஷ்ணன் உட்பட 5 எம்பிக்கள் மற்றும் 150 பயணிகள் இருந்தனர்.