
நடிகர் துல்கர் சல்மானின் வேஃபரர் பிலிம்ஸ் தயாரிக்கும் படம், ‘லோகா சாப்டர் 1 : சந்திரா’. இந்திய சினிமாவில், முதல் பெண் சூப்பர் ஹீரோவை அறிமுகப்படுத்தும் படமாக இது உருவாகிறது. டொமினிக் அருண் எழுதி, இயக்கியுள்ள இதில், கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
‘பிரேமலு’ நஸ்லன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சந்து சலீம் குமார், அருண் குரியன், சாந்தி பாலச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஜேக்ஸ் பீஜாய் இசை அமைத்துள்ளார்.