
சென்னை: வெளிமாநில தமிழ் சங்கங்களுக்கு 40 ஆண்டுகளாக தமிழ் பாடநூல்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்ததை நிறுத்திவைப்பது கண்டனத்துக்குறியது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: வெளிமாநில தமிழ்ச்சங்கங்களுக்கு சுமார் நாற்பது ஆண்டுகளாக தமிழ்ப்பாடநூல்களை இலவசமாக விநியோகித்து வந்த திட்டத்தை நிதி நெருக்கடி எனக் காரணம் காட்டி திமுக அரசு நிறுத்திவைத்திருப்பது கண்டனத்துக்குரியது.