
சென்னை: வடகிழக்கு பருவமழையையொட்டி, சென்னையில் 4 துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்து, அவற்றை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் நா.முருகானந்தம் அறிவுறுத்தினார்.
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, சோழிங்கநல்லூர் வட்டம், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீர்வளத்துறை சார்பில் வெள்ளத்தை தணிப்பதற்காக தெற்கு பக்கிங்ஹாம் கால்வாயிலிருந்து கடல் வரை நேரடியாக ரூ.91 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பெருமூடிய கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.