
சென்னை: தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, செப்டம்பர் முதல் வாரத்தில் லண்டன், ஜெர்மனிக்கு முதல்வர் ஸ்டாலின் பயணம் மேற்கொள்கிறார்.
தமிழக பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக உயர்த்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, உலக முதலீட்டாளர்கள் மாநாடு, முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.