
‘கூலி’ திரைப்படம் இந்த வாரம் பிரமாண்டமாக வெளியாகவிருக்கிறது. டிக்கெட் புக்கிங்கிலும் ‘கூலி’ அதிரடி காட்டிக் கொண்டிருக்கிறது.
ரஜினி, நாகர்ஜூனா, ஆமீர் கான், உபேந்திரா, செளபின் சாஹிர், ஷ்ருதி ஹாசன், சத்யராஜ் போன்ற பட்டாளங்கள் பலர் நடித்திருக்கும் இந்த ‘கூலி’ திரைப்படம் உருவாகுவதற்கு முக்கியக் காரணமே ஒரு ரஜினியின் ஒரு பெயின்டிங்தான்.
ஆம், இந்த சுவாரஸ்யத்தை அனிருத்துமே ‘கூலி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பகிர்ந்திருந்தார்.
‘கூலி’ திரைப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் முடிவடைந்ததை ஒட்டி நேற்று லோகேஷ் கனகராஜ் அனிருத்துடனான அந்தப் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அதில், “நாங்கள் இருவரும் எங்கள் பயணத்தை ஒன்றாகத் தொடங்கி, நான்காவது முறையாக மீண்டும் இணைந்திருக்கிறோம். ஒவ்வொரு முறையும் இருவரும் சேர்ந்து பணியாற்றியது அற்புதமான அனுபவமாக இருந்திருக்கிறது.
இம்முறையும் எங்கள் இருவரின் கூட்டணியும் தெறிக்கவிடும்.
என் இன்னொரு தாயின் மகன், என் சகோதரன் அனிருத்திற்கு எனது மனநிறைந்த அன்புகள்!” என நெகிழ்ந்து குறிப்பிட்டிருந்தார்.
‘லோகேஷ் தலைவருக்கு படம் செய்தால்..!
‘கூலி’ திரைப்படம் நிகழ்வதற்கு மிக முக்கியமான காரணம் அனிருத்தான். அது தொடர்பாக படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அனிருத் பேசியிருக்கிறார். லோகேஷின் ஃபுட்டேஜ்களை இசை வேலைகளின்போது தொடர்ந்து பார்த்து வந்த அனிருத்துக்கு, ‘லோகேஷ் தலைவருக்கு படம் செய்தால் அதிரடியாக இருக்குமே!’ என்ற எண்ணம் வந்திருக்கிறது.

அப்படி ஒரு நாள், அனிருத்தின் வீட்டிலிருக்கும் ரஜினி பெயின்டிங் படத்திற்கு முன் லோகேஷ் கனகராஜும் அனிருத்தும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
அதுதான் ‘கூலி’ திரைப்படத்திற்கான ஆரம்ப புள்ளி. ரஜினிக்கு படம் செய்வது பற்றி அனிருத், லோகேஷிடம் கேட்க, அதற்கு லோகேஷ் கனகராஜும் ஒரு ஐடியாவைச் சொல்லியிருக்கிறார்.
இந்த ஐடியா அனிருத்துக்கு பிடித்துவிட, உடனடியாக ரஜினிக்கு மெசேஜ் செய்து, “லோகேஷ் உங்களுக்காக ஒரு கதை வைத்திருக்கிறார்” எனத் தெரிவித்திருக்கிறார். ரஜினியும் உடனடியாக அடுத்த நாள் காலையிலேயே லோகேஷை அழைத்து வரச் சொல்லியிருக்கிறார்.
அங்கு லோகேஷ் சொன்ன கதை ரஜினிக்குப் பிடித்துவிட, ‘கூலி’ திரைப்படத்தின் வேலைகள் பறக்கத் தொடங்கின. இதோ, மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த வாரம் திரைக்கு வருகிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…