
பொள்ளாச்சி: பரம்பிக்குளம் – ஆழியாறு பாசன திட்டம் அமைவதற்கு காரணமாக இருந்த தலைவர்களின் சிலைகளை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் உயிர் நாடியாகவும் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் பரம்பிக்குளம் – ஆழியாறு பாசன திட்டம் உருவாக காரணமாக இருந்த, மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர், மறைந்த மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம், மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் நா. மகாலிங்கம், வி.கே.பழனிச்சாமி கவுண்டர் ஆகியோரின் நினைவாக அவர்களின் திருவுருவச் சிலைகள் அமைக்க வேண்டும் என விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.