• August 11, 2025
  • NewsEditor
  • 0

பீகார் மாநிலம் பாட்னாவில் இயங்கி வருகிறது Khan GS Research Centre. இந்த நிறுவனத்தின் நிறுவனர், இயக்குநர் கஃபைசல் கான், மாணவர்களால் ‘கான் சார்’ என அழைக்கப்படுகிறார்.

SSC, Railway, UPSC போன்ற அரசு வேலை தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்குப் பயிற்சியளிப்பது. அவர்களை ஊக்குவிப்பது எனச் செயல்பட்டு வருகிறார். கடினமான அரசியல், வரலாறு, புவியியல் போன்ற பாடங்களை கிராம மாணவர்களும் புரிந்துகொள்ளும் மொழி, உவமைகள், நகைச்சுவைகள் மூலம் எளிதாக விளக்குகிறார்.

சில நேரங்களில் நடப்புக்கால அரசியல், சமூக பிரச்னைகள் பற்றியும் திறந்த மனதுடன் பேசுகிறார். அவரது வீடியோக்கள் கோடிக்கணக்கான வீயூஸ்களைக் கடந்திருக்கின்றன.

இந்த நிலையில், சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷபந்தன விழாவை தனது மாணவர்களுடன் கொண்டாடினார். அந்தக் கொண்டாட்டம் குறித்து ஆகஸ்ட் 9-ம் தேதி தன் இன்ஸ்டாகிராம் வீடியோவில் பகிர்ந்துகொண்டார்.

அதில், “இன்று, என் மணிக்கட்டில் கட்டப்பட்ட ராக்கிகளின் எண்ணிக்கை 15,000க்கும் அதிகமாக இருந்தது. இந்த ராக்கிகள் மிகவும் கனமாக இருப்பதால் என்னால் என் கையை உயர்த்தக்கூட முடியவில்லை. இன்றைய காலகட்டத்தில் இதுபோன்ற அனுபவத்தைப் பெற்றதற்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலி.

என் மாணவிகள் என்று சொல்வதை விட அவர்களை என் சகோதரிகளாகவே கருதுகிறேன். அவர்களின் பாசத்தில் மயங்கிவிட்டேன். சாதி, மதம், மாநிலங்கள் என எல்லா காரணிகளையும் கடந்து எனக்கு ராக்கி கட்டினார்கள். இது மனிதநேயத்தைக் காட்டுகிறது. இதை விட சிறந்த பண்டிகை இருக்க முடியாது” என நெகிழ்ச்சியாகத் தெரிவித்தார்.

கான் சாரின் இந்த வீடியோ 24 மணி நேரத்திற்குள் இன்ஸ்டாகிராமில் 8 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *