
சுதீஷ் சங்கர் இயக்கத்தில், வடிவேலு, பஹத் ஃபாசில் நடிப்பில் கடந்த ஜூலை 25ம் தேதி வெளியான திரைப்படம் ‘மாரீசன்’.
ஆர்.பி. சவுத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்திருந்தது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
இந்நிலையில் தற்போது ‘மாரீசன்’ படத்தைப் பார்த்த இயக்குநர் ஷங்கர் படத்தைப் பாராட்டித் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “இப்போதுதான் மாரீசன் படத்தைப் பார்த்தேன்.
வடிவேலு திரையில் தோன்றிய விதம், படத்திற்கு ஆழத்தையும், பலத்தையும் சேர்த்துள்ளது.
அவர் உடைந்த அந்தத் தருணத்தில் என்ன ஒரு அற்புதமான நடிகர் என்பதைக் காட்டிவிட்டார்.
பஹத் ஃபாசில் மீண்டும் ஒரு பாராட்டுக்குரிய நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
அருமையான படத்தைக் கொடுத்த இயக்குநர் சுதீஷ் சங்கர் மற்றும் படக்குழுவுக்குப் பாராட்டுகள்” என்று பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…