
சென்னை: சுதந்திர தினத்தையொட்டி, ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு கட்டணச் சலுகைகளை அறிவித்துள்ளன.
இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள், பயணிகள் அனைவருக்கும் கட்டணச் சலுகைகளை அறிவித்துள்ளன. அதன்படி, இன்றுமுதல் (ஆக. 11) வரும் 15-ம் தேதி வரை இணையதளம், செல்போன் ஆப், டிக்கெட் கவுன்ட்டர்கள் உட்பட அனைத்து விதங்களிலும் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்பவர்களுக்கு இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன.