
பாலிவுட்டின் மிகப்பெரிய ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான ‘வார் 2’, ஆகஸ்ட் 14 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியான படத்தின் டிரெய்லர், ரசிகர்களிடையே ஆர்வத்தைப் பன்மடங்கு அதிகரித்தது.
இதைத் தொடர்ந்து, ‘ஆவான் ஜாவான்’ பாடல் வெளியிடப்பட்டது, அதில் நடிகை கியாரா அத்வானி பிகினி உடையில் தோன்றியிருந்தார். இந்தப் பாடலின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வைரலானது.
மத்திய தணிக்கை வாரியத்தின் உத்தரவின்படி, ஆபாசமாகக் கருதப்பட்ட காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. இதன்படி, ‘ஆவான் ஜாவான்’ பாடலில் கியாரா அத்வானி நடித்த 9 வினாடிகள் கொண்ட கவர்ச்சிகரமான பிகினி காட்சிகள் நீக்கப்பட்டன. இதையடுத்து, தணிக்கை குழு இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.