
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அரசாங்கம் நிலவில் அணு மின் நிலையத்தை அமைக்கும் திட்டத்தை விரைவாக நிகழ்த்த உத்தரவிட்டுள்ளது. நாசாவின் தற்காலிக நிர்வாகி சீன் டஃபி கூறியதன்படி, 2030-க்குள் இந்த திட்டத்தைப் செயல்படுத்த முடுக்கப்பட்டுள்ளனர்.
எனவே அறிவியல் துறையில் பலரும் நடக்கவே முடியாதது அல்லது அதீத செலவீனம் பிடிக்கக் கூடியது என நினைத்த திட்டத்தை நோக்கின் நகர்ந்திருக்கிறது நாசா.
அமெரிக்கா மட்டுமல்லாமல் ரஷ்யாவும் சீனாவும் கூட நிலவில் அணுசக்தி மையத்தை அமைக்க திட்டமிட்டு வருகின்றன. எனினும் அமெரிக்கா விண்வெளி ஆராச்சியில் உலகுக்கு தலைமை தாங்கும் நாடாக திகழ விரும்புகிறது.
அமெரிக்கா மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த விரும்புகிறது. அதற்காக நிலவில் மனிதர்களுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்கும் மையமாக இந்த அணுமின் நிலையம் செயல்படும் எனக் கூறப்படுகிறது.
“சந்திரனின் ஒரு குறிப்பிட்ட பகுதி சிறந்தது என்று அனைவருக்கும் தெரியும். அங்கு பனி இருக்கிறது, அங்கு சூரிய ஒளி இருக்கிறது. நாங்கள் முதலில் அங்கு சென்று அதை அமெரிக்காவிற்கு உரிமை கோர விரும்புகிறோம்,” எனப் பேசியிருக்கிறார் சீன் டஃபி.

ஏன் அணுமின் நிலையம்?
பூமியைச் சுற்றிவரும் செயற்கை கோள்களும், நிலவில் தரையிரங்கும் இயந்திரங்களும் பொதுவாக சூரிய மின்சக்தி மூலம் ஆற்றலைப் பெறுகின்றன. ஆனால் நீண்டகாலம் மனிதர்கள் நிலவை ஆக்கிரமித்திருக்க சூரிய மின்சக்தி மட்டுமே போதுமானதாக இருக்காது என நிபுணர்கள் கருதுகின்றனர்.
நிலவில் சூரியன் இரண்டு வாரம் வரை மறைந்திருக்கும். அதனால் சூரிய மின் சக்தியை மட்டுமே நம்பியிருக்க முடியாது. பேட்டரியும் சோலாரும் இல்லாத ஒரு மின்சார மூலம் வேண்டும் என்கின்றனர்.
இதனால் நாசா குறைந்தபட்சம் 10 கிலோவாட் மின்சாரம் தரக்கூடிய அணுமின் நிலையத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இது ஒப்பீட்டளவில் மிகவும் சிறிய ஒன்றாகும். 70-80 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் அளவுக்கு இயங்கும்.
பொதுவாக அணு உலைகள் தண்ணீரால் குளிர்விக்கப்படும். இதிலிருந்து அதிக வெப்பம் வெளியேறும். வளி மண்டலமும், நீரும் இல்லாமல் நிலவில் அணு மின் நிலையங்கள் தங்கள் வெப்பத்தை நேரடியாக விண்வெளியில் வீசச்செய்ய வேண்டும். இதற்காக அதற்கு பெரிய ரேடியேட்டர்கள் தேவைப்படலாம் என்கின்றனர்.
இந்த அணு உலை பூமியை விட அதீத வெப்பம் உள்ள பகுதியிலும் பாதுகாப்பாக செயல்படும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளது. விண்வெளியில், நிலவில் அணுமின் நிலையத்தை வைப்பதில் இன்னும் பல சிக்கல்கள் உள்ளன. ஒவ்வொன்றையும் ஆராய்ந்து இந்த அணு உலை உருவாக்கப்படும் என்கின்றனர்.