• August 10, 2025
  • NewsEditor
  • 0

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைமை சார்பில் தாடிக்கொம்பு சாலையில் உள்ள தனியார் மஹாலில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் அக்கட்சி பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சி மேடையில் பேசிய பொதுச் செயலாளர் ஆனந்த் கூறும்போது, “தங்களை நேரடியாக அழைப்பதற்காக தான் இந்த கூட்டம். நேரம் இருந்திருந்தால் தங்களின் வீட்டிற்கு வந்து அழைத்திருப்பேன். தவெக தலைவர் விஜய் அறிவித்ததே போதும், என குடும்பத்துடன் வரும் கட்சிதான் தவெக. அன்பால் சேர்ந்த கூட்டம். காசு பணத்தால் சேர்ந்த கூட்டம் கிடையாது. உணர்வுடன் சேர்ந்த கூட்டம் தவெக உயிர் மூச்சு விஜய் தான்.

திண்டுக்கல்லில் நடந்த இரண்டாவது மாநில மாநாடு பொதுகூட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்

விக்கரவாண்டி தவெக வெற்றி மாநாட்டில் வாகனங்கள் எண், இன்சூரன்ஸ், டிரைவர் பெயர், லைசென்ஸ் என அனைத்துயும் பதிவு செய்து மாநாடு நடத்தும் ஒரே கட்சி தவெக மட்டும்தான்.

உண்மையான சகோதர்கள் உள்ள கட்சி. 2-வது மாநாட்டிற்கு பஸ், வேன், கார் கிடைக்காவிட்டாலும் வெற்றி மாநாடு சிறப்பாக நடைபெறும். நமது தலைவர் விஜய் காசு பணம் கொடுக்க வேண்டியது இல்லை. அவரிடம் நல்ல மனசு இருக்கிறது.

விஜய்
விஜய்

வயது முதிர்வின் காரணமாக அரசியலுக்கு வரவில்லை. துறையின் உச்சத்தில் இருந்து தான் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார்.

2026-ல் திண்டுக்கல்லில் 7 தொகுதி த.வெ.க வெற்றி பெறும். இன்று நேற்று மக்கள் சேவை செய்ய ஆரம்பிக்கவில்லை கடந்த 32 வருடங்களாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் விஜய் கட்சி ஆரம்பிப்பார் என்று தெரியாமலேயே மக்களுக்கு உதவி செய்த ஒரே இயக்கம் நமது இயக்கம் தான். 2026-ல் விஜய் தமிழக முதல்வர் ஆவார். மகளிருக்கு பாதுகாப்பு அளிப்பார்.” என தெரிவித்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *