
2016-ம் ஆண்டு கன்னடத் திரையுலகில் வெளியான ‘க்ரிக் பார்ட்டி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.
கன்னடத் திரையுலகில் ஆரம்பித்த ராஷ்மிகா மந்தனாவின் திரையுலகப் பயணம் தெலுங்கு, தமிழ், தொடர்ந்து பாலிவுட் வரை சென்றிருக்கிறது.
சமீபத்தில் இவரது நடிப்பில் ‘குபேரா’ படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து ‘MYSAA’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
‘நேஷ்னல் க்ரஷ்’ என்று அழைக்கப்படும் ராஷ்மிகாவிற்கு எந்த அளவிற்கு ரசிகர்களிடையே ஈர்ப்பு இருக்கிறதோ, அதே அளவிற்கு ட்ரோல்களையும் அவர் சந்தித்து வருகிறார்.
இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கும் அவர், ” நான் மிகவும் எமோஷனலான ஒரு நபர். அதை நான் வெளியில் காட்டிக் கொள்ள விரும்பவில்லை. அப்படி செய்வதால் ராஷ்மிகா கேமராவுக்காக செய்கிறார் என்று கூறுகிறார்கள்.

எனக்கு எதிராக ட்ரோல் செய்ய பணம் கொடுக்கப்படுகிறது. என்னை வளர விடாமல் தடுக்கின்றனர். இது வருத்தமளிக்கிறது. என் மீது அன்பு காட்டாவிட்டாலும், அமைதியாக இருங்கள், அதுவே போதுமானது.
நான் ரொம்ப உண்மையாவும் இருப்பேன். ஆனால் எப்போதும் அதை என்னால் வெளிப்படுத்த முடியாது. ஏனென்றால், இங்கு ரொம்ப அன்பாக இருந்தால் போலியாக இருக்கிறதாக நினைக்கிறார்கள்.” என்று வருத்தமாகப் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…