
புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லாவிட்டால், ராகுல் காந்தி தார்மிக அடிப்படையில் தனது எம்பி பதவியை ராஜினமா செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, "இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல்கள் மீது நம்பிக்கை இல்லை என்று ராகுல் காந்தி கூறி இருக்கிறார். அதோடு, இந்திய தேர்தல் ஆணையம் கோரியபடி, புகார் கடிதம் மற்றும் ஆவணத்தை வழங்கவும் மறுக்கிறார்.