
நானி நடித்து வரும் படம் ‘த பாரடைஸ்’. ஸ்ரீகாந்த் ஒடெலா இயக்குகிறார். ‘தசரா’ படத்துக்குப் பிறகு இருவரும் இதில் இணைந்துள்ளனர். இதை எஸ்எல்வி சினிமாஸ் சார்பில் சுதாகர் செருகுரி தயாரித்துள்ளார்.
அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு சி.ஹெச்.சாய் ஒளிப்பதிவு செய்கிறார். ராகவ் ஜூயல் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அடுத்த ஆண்டு மார்ச் 26-ம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது.