• August 9, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​நா​காலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் சென்னை அப்​போலோ​வில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார். நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் (80). சென்னை வந்​திருந்த நிலை​யில் நேற்று காலை வீட்​டில் அவர் கால் தவறி கிழே விழுந்​த​தில், அவரது தலை​யில் அடிப்​பட்​ட​தாகக் கூறப்​படு​கிறது. இதையடுத்​து, சென்னை அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் அவர் அனு​ம​திக்​கப்​பட்​டார்.

அவருக்கு மருத்​து​வர் குழு சிகிச்சை அளித்து வரு​கிறது. தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன் ஆகியோர் அவர் விரை​வில் நலம்​பெற்​று, மீண்​டும் நல்ல உடல்​நிலைக்கு திரும்ப வேண்​டும் என்று சமூக வலைதள பதிவில் தெரி​வித்​துள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *