
சென்னை: தூய்மைப் பணியை தனியாரிடம் வழக்கும் விவகாரம் தொடர்பாக, சென்னை மாநகராட்சி ஆணையரிடம் விளக்கம் கேட்டு, தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை மாநகராட்சியில், ஏற்கனவே 10 மண்டலங்களில் தூய்மைப் பணி தனியாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது, ராயபுரம், திரு.வி.க ஆகிய 2 மண்டலங்களில் குப்பை சேகரிக்கும் பணியை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தனியார்மயமாதலை கைவிடக் கோரியும், தற்காலிகமாக பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களை, பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், ராயபுரம், திரு.வி.க. நகர் மண்டலங்களை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் 7-வது நாளாக நேற்றும் வேலை நிறுத்தம் மற்றும் ரிப்பன் மாளிகை முன்பு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களில் பலர் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்கள்.