
புதுடெல்லி: மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றபின், பிரதமர் மோடியை நேற்று முதல் முறையாக சந்தித்த மக்கள் நீதி மய்யம் (மநீம) தலைவர் கமல்ஹாசன், கீழடி ஆய்வு அறிக்கையை அங்கீகரிக்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக கடந்த ஜூலை 25-ம் தேதி பொறுப்பேற்றார். அவர் பிரதமர் மோடியை டெல்லியில் நேற்று சந்தித்தார்.