• August 7, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கடற்​கரை – வேளச்​சேரி பறக்​கும் ரயில் வழித்​தடத்​தில், வரும் 2028-ம் ஆண்​டு​முதல் மெட்ரோ ரயில்​களை இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. தெற்கு ரயில்​வே​யிடம் இருக்​கும் சென்னை கடற்​கரை – வேளச்​சேரி வழித்​தடத்தை மெட்ரோ ரயில் நிர்​வாகத்​திடம் ஒப்​படைக்​கும் திட்​டத்​துக்கு ரயில்வே வாரி​யம் கொள்கை ரீதி​யான ஒப்​புதலை ஜூலை 31-ம் தேதி வழங்​கியது.

விரை​வில் இதற்​கான புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் கையெழுத்​தாக உள்​ளது. இதன் மூல​மாக பறக்​கும் ரயில் சேவை​யின் சொத்​து, ரயில் இயக்​கம் மற்​றும் பராமரிப்பு ஆகியவை சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்திடம் ஒப்​படைக்​கப்படும். இதன் பிறகு இந்த வழித்​தடம் முழு​மை​யாக மெட்ரோ ரயில் கட்​டமைப்​புக்கு மாற்​றப்​பட​வுள்​ளது. குறிப்​பாக ஒவ்​வொரு ரயில் நிலை​யத்​தி​லும் மெட்ரோ ரயில் நிலை​யங்​களில் உள்ள வசதி​கள் போன்று ஏற்​படுத்​தப்பட உள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *