
புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, “வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 21. மாநிலங்களவை செயலாளர்தான் தேர்தல் அதிகாரி. வேட்புமனுக்களை வேட்டாளர்கள், மாநிலங்களவை அறை எண் 28-ல் தேர்தல் அதிகாரி அல்லது துணை தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்கலாம். பொது விடுமுறை இல்லாத நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை சமர்ப்பிக்க முடியும். இதற்கான வைப்புத் தொகை ரூ.15,000.