
கொச்சி / டேராடூன்: உத்தராகண்டில் மேகவெடிப்பால் பெருவெள்ளம் ஏற்பட்ட பேரிடரை தொடர்ந்து இதுவரை சுமார் 150 பேர் மீட்கப்பட்டுள்ளனர். கேரளாவை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 28 பேரை காணவில்லை. உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் உத்தரகாசி மாவட்டம், இமயமலைப் பகுதியில் நேற்று முன்தினம் மேகவெடிப்பால் திடீர் பெருவெள்ளம் ஏற்பட்டது.
சார்தாம் யாத்திரை தலங்களில் ஒன்றான கங்கோத்ரி அருகில் இந்தப் பெருவெள்ளம் ஏற்பட்டதில் இக்கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள தரளி என்ற கிராமம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.