• August 6, 2025
  • NewsEditor
  • 0

”ஹெச்.ஐ.வி தொற்றுடன் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இது தவிர 20 வகையான பால்வினை நோய்கள் உள்ளன. இவற்றில் பாக்டீரியாக்களால் வருகிற பால்வினை நோய்களைப் பாதிக்கப்பட்டவர்கள் உடனே வந்தால் சரி செய்துவிடலாம். வைரஸால் ஏற்பட்ட பால்வினை நோய்களைக் குணப்படுத்தவே முடியாது.

ஹெச்.ஐ.வி போல உயிர்க்கொல்லி அல்ல என்றாலும், சரி செய்யவே முடியாத பால்வினை நோய்களும் இருக்கின்றன. இவையெல்லாம் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் முன் எப்போதையும்விட இப்போது அதிகமாக வருகிறார்கள்” என வேதனைப்படுகிற சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் அவர்களிடம், இவற்றுக்கெல்லாம் காரணம் என்ன என விசாரித்தோம்.

Chem Sex

”கெம் செக்ஸ்” என்றார் ஒரு வார்த்தையில்..!

”உலகம் முழுக்கவே போதை கலாசாரம் அதிகமாகிக்கொண்டே இருப்பதைப் பார்க்க முடிகிறது. சிங்கப்பூர், சவுதி போன்ற சட்டங்களும் தண்டனைகளும் கடுமையாக இருக்கக்கூடிய நாடுகளில் போதைப் பயன்பாடு கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால், பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். கடுமையான தண்டனைகள்தான் போதைப்பொருள் பயன்பாட்டிலிருந்தும், கெம் செக்ஸில் இருந்தும் இளம் தலைமுறையைக் காப்பாற்ற முடியும்” என்றவர், தொடர்ந்தார்.

போதைப் பொருள்கள்
போதைப் பொருள்கள்

”கெம் செக்ஸ் (Chem Sex) என்பது போதை மருந்துகளை எடுத்துக்கொண்டு செக்ஸ் செய்வது. இப்படிச் செய்யும்போது, செக்ஸை இன்னும் அதிகமாக என்ஜாய் செய்ய முடிவதாக, இதைச் செய்பவர்கள் நம்புகிறார்கள். செக்ஸ் உணர்வுகள் உச்சத்துக்குச் செல்வதாகவும், பறப்பதுபோல உணர்வதாகவும் சொல்கிறார்கள். அதனால், இந்த முறையை பார்ட்டிகளில் பின்பற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

சராசரி மனிதன்கூட, போதைப்பொருள்களை எடுத்துக்கொள்ளும்போது தேவையில்லாத செக்ஸில் ஈடுபடலாம். மனைவியைத் தவிர மற்றப் பெண்களிடம் உறவுகொள்ளும்போது, காண்டம் போட்டுத்தான் செக்ஸ் செய்ய வேண்டும் என்கிற தெளிவு இருக்கிற ஆண்கள்கூட, ‘போதை மயக்கத்தில் என்ன செய்தேன்’, ‘எப்படி செக்ஸ் செய்தேன் என்பதே தெரியவில்லை’ என்கிறார்கள். இப்படிச் சொல்கிற நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.

போதைப் பழக்கம் கல்லூரி மாணவர்களிடமும், பிளஸ் ஒன், பிளஸ் டூ படிக்கிற மாணவர்களிடமும் அதிகரிப்பதைப் பார்க்க முடிகிறது. இதனுடன் செல்போன் வழி ஆபாசப்படங்களும் சேரும்போது, பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வு உள்பட சமூகத்தில் மிகக் கடுமையான விளைவுகள் ஏற்படும்.

போதை மருந்தை எடுத்துக்கொண்டு செக்ஸ் செய்வது சம்பந்தப்பட்டவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால், அது சமூகத்துக்கு நல்லதல்ல. உடனடியாக எல்லாவற்றையும் சரி செய்ய வேண்டிய அவசரத்தில் நாம் எல்லோரும் இருக்கிறோம்” என்கிறார் டாக்டர் காமராஜ்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *