• August 6, 2025
  • NewsEditor
  • 0

லெஜண்டரி இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், சார்லஸ் பெல்லெக்ரினோவின் வரவிருக்கும் புத்தகமான ‘கோஸ்ட்ஸ் ஆஃப் ஹிரோஷிமா’வை முன்வைத்து தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார் என ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

இப்போது வெளியாகியுள்ள புத்தகத்தைக் குறித்து தனது எண்ணங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் அவர்.

James Cameron என்ன கூறினார்?

“இது ஒரு அட்டகாசமான புதிய புத்தகம்” எனக் கூறியிருக்கும் அவர், அதை முன்வைத்து திரைப்படத்தை இயக்க ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Ghosts of Hiroshima

“நான் (இதிலுள்ள) சிறந்த கதைகளால் ஈர்க்கப்பட்டேன், டைட்டானிக் படத்திற்குப் பிறகு இது போன்ற சக்திவாய்ந்த ஒரு உண்மையான கதையை நான் கண்டதில்லை” எனக் கூறியுள்ளார்.

ஜேம்ஸ் கேமரூனின் அடுத்த படம், சார்லஸ் பெல்லெக்ரினோவின் Ghosts of Hiroshima மற்றும் Last Train From Hiroshima ஆகிய இரண்டு புத்தகங்களின் தழுவலாக இருக்கும் எனக் கூறியிருக்கிறார்.

மேலும், அவரது திரைப்பட வரிசையில் குறைந்த அளவில் வசூல் செய்யும் படமாகவும் அது இருக்கலாம் எனக் கூறியுள்ளார்.

இந்தப் படம் அமெரிக்கா மீது ஜப்பான் வீசிய ஹிரோஷிமா மற்றும் நாகசாகி குண்டு வெடிப்பைப் பற்றிப் பேசும். இரண்டு அணு குண்டு வெடிப்பிலும் சிக்கி உயிர் தப்பிய ஒரு நபரைப் பற்றியதாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

James Cameron
James Cameron

அணு குண்டால் பாதிக்கப்பட்டவர்களின் வேதனையை நேரடியாக எவ்வித தயக்கமும் இன்றி வெளிப்படுத்தும் என்கிறார்.

ஏற்கெனவே சார்லஸ் பெல்லெக்ரினோவின் புத்தகங்களைத் தழுவி ஜேம்ஸ் கேமரூன் உருவாக்கிய டைட்டானிக், அவதார் படங்கள் உலகளாவிய வரவேற்பைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

James Cameron இயக்கத்தில் அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் திரைப்படம் டிசம்பர் 19ம் தேதி வெளியாகவிருக்கிறது. அவதார் தொடர் படங்கள் முடிவடைந்த பிறகு கோஸ்ட்ஸ் ஆஃப் ஹிரோஷிமாவுக்கான பணிகளைத் தொடங்குவார் எனக் கூறப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *