• August 6, 2025
  • NewsEditor
  • 0

சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவும் தனிச்சட்டம் தேவை என திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இன்று முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்து அதற்கான மனுவை அளித்துள்ளனர்.

புதிய சட்டம், தனிச்சட்டம், சிறப்பு சட்டம்

தொடர்ந்து தலைவர்கள் இரா.முத்தரசன், பெ.சண்முகம் மற்றும் திருமாவளவன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “புதிய சட்டம் தேவை இல்லை என்கிற ஒரு கருத்து பரவலாக பேசப்படுகிறது. ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு என்று புதிய சட்டம், தனிச்சட்டம், சிறப்பு சட்டம் தேவை என்பதை கடந்த சில ஆண்டுகளாக வெவ்வேறு அமைப்புகள் ஜனநாயக சக்திகள் வலியுறுத்தி வருகின்றன. முதலமைச்சர் அவர்களை நாங்கள் சந்தித்து பேசிய போது கொடுத்த கோரிக்கை மனுவில் கோடிட்டு காட்டி இருக்கிறோம்.

திருமாவளவன்

இந்த ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு சட்டம் தேவை என்று தேசிய பெண்கள் ஆணையம் முன்மொழிந்து இருக்கிறது. the Prevention of Crimes in the name of Honor and tradition bill 2010 – இப்படி ஒரு மசோதாவை தேசிய பெண்கள் ஆணையம் முன்மொழிந்திருக்கிறது.

அதேப்போல 2012ல் சட்ட ஆணையமும் ‘Prevention of Inference in the Freedom of matrimonial alliances in the name of honor and tradition’ என்ற பெயரில் ஒரு சிறப்பு சட்டம் வேண்டும் என்பதை பரிந்துரைத்திருக்கிறது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2015ல் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஒரு தனிநபர் சட்ட வரைவை அ.சவுந்தரராஜன் முன்மொழிந்திருக்கிறார். சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் வி ராமசுப்பிரமணியம் அவர்கள் இப்படி ஒரு தனி சட்டம் தேவை என்பதை அவர் தீர்ப்பாகவே வழங்கி இருக்கிறார்.

அதைப்போல 2017 மாநிலங்களவையில் உறுப்பினர் விஜய் சாய் ரெட்டி the prevention of crimes in the name of honor and tradition and prohibition of interference with the freedom of matrimonial alliances என்ற பெயரில் ஒருவ் தனிநபர் மசோதாவை தாக்கல் செய்திருக்கிறார்.

அ.சவுந்தரராஜன்

அடுத்து 2018 சக்திவாகினி vs இந்திய அரசு வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த சிறப்பு சட்டத்தின் தேவையை வலியுறுத்தி இருக்கிறது. அந்த சட்டம் உருவாக்கப்படும் வரை மாநில அரசுகள், காவல்துறையினர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்கிற வழிகாட்டுதலையும் அந்த தீர்ப்பு விரிவாக வழங்கி இருக்கிறது.

சுட்டிக்காட்டி இருக்கிறோம்.!

ராஜஸ்தான் மாநிலத்தில் திருமண இணை தெரிவு சுதந்திரத்தில் கௌரவம் மற்றும் பாரம்பரியம் என்ற பெயரில் குறுக்கிடுவதைத் தடுக்கும் வகையில் சட்ட மசோதாவைக் கொண்டு வந்திருக்கிறார்கள், Freedom of Marriage and Association and Prohibition of crimes in the name of honor bill 2023. இந்த அனைத்தையும் நாங்கள் முதலமைச்சருடைய கவனத்திற்கு ரெஃபரன்ஸஸ் ஆக சுட்டிக்காட்டி இருக்கிறோம்.

எனவே முதல்வர் அவர்கள் இதை பரிசளிக்க வேண்டும் என்று மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்தியிருக்கிறோம். இது SC – SC அல்லாதவர்களுக்கு இடையிலான பிரச்னை அல்ல. ஒட்டுமொத்த சமூகத்துக்குமான பிரச்னை. எல்லா சாதியினருக்கு இடையிலேயும் இந்த மாதிரி காதல் திருமணங்கள் நடந்தால் படுகொலைகள் நடக்கின்றன.

இது தமிழ்நாட்டில் மட்டும் நடப்பதல்ல இந்தியா முழுவதும் நடக்கிறது, தேசிய அளவில் சட்டம் வேண்டும் என்றாலும் கூட மாநில அரசு சட்டம் இயற்றிக்கொள்ள அதிகாரம் இருக்கிறது என்கிற நிலையில்தான் தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து நாங்கள் வலியுறுத்தி இருக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

முதல்வரை சந்தித்து வலியுறுத்தியிருந்தாலும் ஆகஸ்ட் 9ம் தேதி சென்னையிலும் 11ம் தேதி பிற மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார் திருமாவளவன்.

மேலும் இந்த சட்டம் இயற்றப்படுவதால் தேர்தலில் இடைநிலை சாதியினர் வாக்குகள் கிடைக்காமல் போகுமா என்ற கேள்விக்கு, “அது கற்பனையான ஒன்று. மக்கள் இதற்கெல்லாம் மனம் மாறமாட்டார்கள். தமிழ்நாட்டு மக்கள் கொள்கை அடிப்படையில் சிந்திக்கத் தெரிந்தவர்கள், வெறும் சாதி மத அடிப்படையில் வாக்களிப்பவர்கள் மிக மிகக் குறைவுதான்.” எனக் கூறினார்.

அத்துடன் முதலமைச்சரை நலம் விசாரித்ததாகவும், தூய்மை தொழிலாளர் வேலைவாய்ப்பு விஷயத்தை பரிசீலிக்கவும் முதல்வரிடம் கோரிக்கை வைத்ததாகக் கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *