• August 6, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

அவனும் நானும் ..

நான் பார்கிறது எல்லாம் பச்சை பச்சையா தெரியுதே? 

எனக்கு என்ன பச்ச காமாலையா?

அதெல்லாம் ஒன்றும் இல்லை அவருக்கு பச்சை பிடிக்கும்..

அதானால பச்சை தான் எனக்கு பிடித்த நிறமாக ஆகிவிட்டது.

பச்சை தமிழர்களுக்கும் இந்த பச்சை தமிழச்சியின் பசுமையான வணக்கம்!.

என் அவனை முதன் முதலில் நான் பார்த்தது நூலகத்தில் தான்.

எங்கையோ எப்போதோ பார்த்த அந்த முகம்..

என்றும் ஆசை தீராத அந்த முகம்..

கண்களில நுழைந்து இதயத்தை தைத்தது..

கடலை விட பெரியது என்னவனின் கருணை..என்ன இப்படி உளர்றேனா?

அப்புறம் வந்துருச்சசல எனக்கும் அது..

காதல்.. வந்துட்டா சொல்லவா வேணும்

வயித்துல பட்டாம்பூச்சி கிச்சு கிச்சு மூட்டியது.

நான் மட்டுமே இந்த உலகத்தில் அழகாகவும், மகிழ்ச்சியாக இருப்பதாக உணர்ந்தேன்..

அனைத்து இளைய ராஜா பாடல்களும் எனக்கே எனக்காக எழுதியது மாதிரி இருந்தது..

வேள்பாரி

ஒரே கனவு தான்.. 

என்னவன் இயற்கை விரும்பி அதனால் அவனும் நானும்..

காடு மேடு மலை நதி நீர் 

னு சுற்றித் திரிந்தோம். அவன் மேல உள்ள ஆசையில் செடி வளர்கிறது, மரம், செடி, கொடிய பார்த்தா தனியா பேசிட்டு இருக்குறது..விதைகளை சேகரிக்கிறதுனு இருந்தேன். பித்து படித்தவள் போல் ஆனேன். 

இவ்வளவு உளறிட்டு இருக்கேனே அவர யாருன்னு சொல்லல னா எப்படி?

பெரும்பாலும்.. பெண்கள் ஓட

காதல..வெளியில் சொல்ல ஒரு தயக்கம் ..

எனக்கும் அப்படி தான் இருந்தது என் இந்த வயசில சூழல்ல இந்த மாதிரி பேசலாமானு 

ஆனால் 

காதல் என்பது உயிர் இயற்கை..

ஒரு இயல்பு..ஒரு செடியில பூ மலர்வது எப்படி ஒரு இயல்பு.. அது போல தான்..பாருங்க எப்படி கவிதை கவிதை அதுவா வருது..

அதனால தான் சொல்றேன், அவரைப் பற்றி சொல்ல எனக்கு எந்த ஒரு பயமோ தயக்கமோ வெட்கமோ துளிக்கூட கிடையாது மாறாக அவரை யாருன்னு சொல்லனும்னு நினைக்கும் போதே..

நெஞ்சை நிமிர்த்தி, நரம்புகள் புடைக்க, கர்வத்துடனும், வீரத்துடனும் சொல்வேன்:

300 ஊர்களைக் கொண்ட, பரம்பு மலையை ஆண்ட, வேளிர்குலத் தலைவன், வீரயுக நாயகன் வேள் பாரி என்று..

அப்போ அவனை முதன் முதலில் நான் பார்த்தது நூலகத்தில் என்று நான் சொன்னது:

வீரயுக நாயகன் வேள்பாரி புத்தகத்தை. 

கண்டிப்பாக அது புத்தகம் அல்ல நம் தமிழர்களின் வரலாறு..

நாம தான் கொஞ்சம் ஒரு மாதிரி ஆச்சே ..

எந்த கதை கேட்டாலும், பார்த்தாலும், படித்தாலும் அந்த கதைல வர கதாபாத்திரமாகவே மாறுற மனோபாவம்..

முழுசா மாறின சந்திரமுகிய பார்க்குறீங்களா..?

ஆதினியாக நான் என் தலைவனுடன் காடு மேடு பரம்பு மலைன்னு எங்கள் தெய்வ வாக்கு விலங்கின் வழி காட்டுதலுடனும், கொற்றவையின் ஆசியுடன் அவனின் விரல் பிடிச்சு ஒய்யாரமாய் வலம் வந்தேன்..

சோமபூண்டை அருந்திய உணர்வுடன் சிலாக் குடியில் நானும் அவனும்..

காதலில் கசிந்து உருகியது..

முல்லைக்கு தேர் தந்தவனே 

இந்த முல்லையின் மனதை பறித்தவனே..

அறம் காக்கும் தெய்வம் எம்மையும், எம் மக்களையும், எம் நிலத்தை ஆளட்டும் என்றான்…

இயற்கையை பாரியும்,

பாரியை இயற்கையும் கைவிடவில்லை..

வேள்பாரி என் மனதில் மட்டுமல்ல, உலகின் கடைசி தமிழன் இருக்கும் வரை ஒவ்வொரு மனசுலயும் வீட்டிலும் வாழ்ந்து கொண்டு இருப்பான்.

-Latha Masilamani 

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *