• August 6, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: இந்​தி​யா​வின் மிக நீண்ட கால உள்​துறை அமைச்​சர் என்ற பெரு​மையை அமித் ஷா பெற்​றுள்​ளார். பாஜக மூத்த தலைவர் எல்​.கே.அத்​வானி​யின் முந்​தைய சாதனையை அவர் முறியடித்​தார். கடந்த 2019-ம் ஆண்டு மே 30-ம் தேதி முதல் நாட்​டின் உள்​துறை அமைச்​ச​ராக அமித் ஷா பதவி வகித்து வரு​கிறார். அவர் நேற்று 2,258 நாட்​கள் (6 ஆண்​டு​கள் 68 நாட்​கள்) பதவிக் காலத்தை முடித்து நாட்​டின் மிக நீண்​ட​கால உள்​துறை அமைச்​சர் என்ற பெரு​மையை பெற்​றுள்​ளார்.

கடந்த 2019, ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீருக்​கான சிறப்பு அந்​தஸ்து ரத்து செய்​யப்​படு​வதை நாடாளு​மன்​றத்​தில் அமித் ஷா அறி​வித்​தார். அதே ஆகஸ்ட் 5-ம் தேதி இந்த சாதனையை அவர் படைத்​துள்​ளார். இதற்கு முன் காங்​கிரஸ் தலை​வர் கோவிந்த் வல்லப பந்த், பாஜக தலை​வர் எல்​.கே.அத்​வானி ஆகியோர் மத்​திய உள்​துறை அமைச்​ச​ராக மிக நீண்ட காலம் பணி​யாற்​றி​யுள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *