
புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை தவறாக சேர்த்தது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் (இசிஐ) 4 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ளது.
இதுகுறி்த்து இசிஐ வெளியிட்ட அறிக்கையில், ‘‘மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் தரவுத்தளத்தின் உள்நுழைவு சான்றுகளை அங்கீகரிக்கப்படாத நபர்களுடன் பகிர்ந்து கொண்டது மற்றும் பெயர்களை தவறாக சேர்த்தது குறித்து பருய்பூர் புர்பாவில் பணியாற்றிய நான்கு அதிகாரிகள் மீது மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரி இசிஐ-க்கு புகார் தெரிவித்தார். இதையடுத்து அந்த நான்கு அதிகாரிகளும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்’’ என கூறப்பட்டுள்ளது.