
மிருணாள் தாக்குரை நடிகர் தனுஷ் காதலித்து வருவதாக மும்பை ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது. இந்தி நடிகையான மிருணாள் தாக்குர், தமிழில் நேரடி படங்களில் நடிக்கவில்லை என்றாலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான ‘சீதாராமம்’, ‘ஹாய் நானா’ ஆகிய படங்களின் மூலம் தமிழிலும் அறியப்பட்டார்.
இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வரும் அவர், கடந்த ஆக.1-ம் தேதி மும்பையில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பார்ட்டியில் பல நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர். தனுஷும் கலந்துகொண்டார். அவருடைய கையை பிடித்துக் கொண்டு மிருணாள் தாக்குர் அவரிடம் ஏதோ சொல்வது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.