
வண்டலூர் – கேளம்பாக்கம் சாலை, கண்டிகை சந்திப்பில் 'சிக்னல்' அமைக்க வேண்டும் மற்றும், காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து போலீஸாரை பணியில் ஈடுபடுத்த வேண்டுமென வாகன ஓட்டிகள், பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வண்டலூர் – கேளம்பாக்கம் இடையிலான, 20 கி.மீ., துாரமுள்ள சாலையில் இரு பக்கமும், 15-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள், 40-க்கும் மேற்பட்ட இணைப்பு சாலைகள், 30-க்கும் மேற்பட்ட அரசு தனியார் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் உள்ளன. தாம்பரம், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி பகுதியிலிருந்து ஓஎம்ஆர் சாலையில் உள்ள ஐ.டி., நிறுவனங்களுக்கு செல்வோர், இந்த சாலையில் தான் பயணிக்கின்றனர்.