
திருவள்ளூர்: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, முதற்கட்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, நேற்று திருத்தணியில் சுமார் 2 கிமீ. தூரம் நடைபயணம் மேற்கொண்டார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, ‘உள்ளம் தேடி’- இல்லம் நாடி’(வாக்குச் சாவடி நிர்வாகிகளுடனான சந்திப்பு), ‘கேப்டனின் ரத யாத்திரை’–’மக்களை தேடி மக்கள் தலைவர்’ (மக்களுடன் சந்திப்பு) ஆகிய பெயர்களை கொண்ட தமிழகம் முழுவதுமான முதற்கட்ட சுற்றுப்பயணத்தை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று முன்தினம் கும்மிடிப்பூண்டி பேரவை தொகுதிக்கு உட்பட்ட ஆரம்பாக்கத்தில் தொடங்கினார்.