• August 4, 2025
  • NewsEditor
  • 0

* தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்ட முதலீட்டாளர்கள் மாநாட்டில், 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், 41 நிறுவனங்களுடன் ரூ. 32,554 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

* மதுரையில் ஆகஸ்ட் 25-ம் தேதி மாநாடு நடத்த த.வெ.க திட்டமிட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் 27 விநாயகர் சதுர்த்தி என்பதால் ஆகஸ்ட் 18 முதல் 22-க்குள் மாநாடு வைத்துக்கொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் விளக்கம்.

* டெல்லியில் இன்று காலை வாக்கிங் சென்றுகொண்டிருந்த தமிழக காங்கிரஸ் எம்.பி சுதாவின் கழுத்திலிருந்த செயினை, பைக்கில் ஹெல்மெட் அணிந்துவந்த ஒருவர் பறித்துச் சென்றார்.

* கேரளாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 2 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த டாக்டர் ரைரு கோபால் (80) நேற்று காலமானார்.

* நீலகிரி மாவட்டத்துக்கு அதிகனமழை காரணமாக ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டிருப்பதால் நாளை ஒருநாள், அனைத்து சுற்றுலாத் தளங்களும் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

* இந்தியாவின் 2000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு இடத்தை சீனா சட்ட விரோதமாக ஆக்கிரமித்த விவகாரத்தில் பாஜக மத்திய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ராகுல் காந்தி குற்றச்சாட்டியதற்கெதிரான வழக்கில், “ஒரு உண்மையான இந்தியன் இப்படி நிச்சயமாகப் பேச மாட்டார்” என உச்ச நீதிமன்றம் காட்டம்.

* இந்தியா, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கி வெளியில் அதிக லாபத்துக்கு விற்பதாகக் குற்றம்சாட்டியிருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியா மீதான வரியை மேலும் உயர்த்தப் போவதாக அறிவித்திருக்கிறார்.

* சீனாவைச் சேர்ந்த இரட்டையர்கள் ஜிசோங், ஜியி கல்லூரி நுழைவுத் தேர்வில் 666 என ஒரேமாதிரி மதிப்பெண் எடுத்து ஆச்சர்யப்படுத்தியிருக்கின்றனர்.

* ஓவல் மைதானத்தில் நடந்த பரபரப்பான கடைசி டெஸ்டில் இங்கிலாந்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 2 – 2 என சமன் செய்திருக்கிறது இந்தியா.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *