
சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்', ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டங்களை தற்போதைய பெயரிலேயே தொடர்ந்து செயல்படுத்த அனுமதிக்கக் கோரி, தமிழக அரசின் மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம், ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் முதல்வரின் பெயரை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசுத் திட்டங்களின் பெயர்களில் வாழும் ஆளுமைகளின் பெயர்கள் பயன்படுத்த அனுமதிக்க முடியாது எனவும், திட்டம் தொடர்பான விளம்பரங்களில் முன்னாள் முதல்வர், கட்சியின் கொள்கைத் தலைவர்களின் புகைப்படங்கள் இடம் பெறக் கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தது.