
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
நம் அப்பா-அம்மா அறிமுகம் ஆவதால் தான் நாம் இந்த மன்னில் பிறக்கிறோம், அரசு நூலகத்தில் ஒரு ஆணால்தான் எனக்கும் விகடன் அறிமுகமானது.
2013ல் ஒரு நாள் அரசு நூலகத்தில் நான் இருக்கும் போது நூலகத்திற்க்குள்ளே ஹஸ்க்கி குரலில் தொலைப்பேசியில் ஒரு ஆண்“தம்பி ‘விகடன்’ படி ‘ஆனந்த விகடன்’ 17ரூவா தான் வாழ்க்கையில எவ்வளவோ பணத்த கினத்தில கல்லு போடற மாறி போடுறோம் ‘ஆனந்த விகடன்’ வாங்கி படி அது உன் கையை பிடிச்சு கூட்டீட்டு போகும்.
‘ஆனந்த விகடன்’ உனக்கு தரும் அனுபவம் ஏராளம்” என்று பேசிக்கொண்டு இருந்தார். நான் அவரை திரும்பி பார்த்தேன் அப்போது அவர் எழுந்து போய் கொண்டு இருந்தார் அவர் முகம் பார்க்க முடியவில்லை.
அப்பா-அம்மா இல்லாமல் வளரும் குழந்தை பெரும் துன்பத்துடனே வளரும் அதுவே நல்லமுறையில் நடத்த ஒரு உறவு கிடைத்தால் அந்த குழந்தை பெற்றவர்களையே மறக்க நேரிடலாம். ‘ஆனந்த விகடனை’ அறிமுகம் செய்தவர் முகம் கூட எனக்கு தெரியாது, வாயில் ஏதோ பழத்தை தின்றபடி பறக்கும் பறவை அந்த பழவிதையை கீழே போட்டு விட்டு செல்லும் அந்த பறவை போட்ட விதை மரமானால் அந்த பறவை அது போட்ட விதையின் மரத்தின் மேல் அமர்ந்தாலும் பறவைக்கு தெரியாது அது தான் போட்ட விதை என்று. ஆனால் ‘விகடன்’ எனக்கு தந்த வாழ்வியல் மாற்றம் எனக்கு ‘ஆனந்தவிகடனை’ அறிமுகம் செய்தவரையே நினைவிலிருந்து மறக்கச்செய்தது..
தாயிடம் பாலுக்கு ஏங்கும் குழந்தை போல , மாதம் 1ஆம் தேதி தொலைப்பேசியில் சம்பளம் வந்துவிட்டதா என்று பார்க்கும் வீட்டு தலைவனைப்போல எப்போது புதன்கிழமை சாயங்காலம் 5.மணி ஆகும் என்று காத்தபடி இருப்பேன் ‘ஆனந்த விகடனை’ கடையில் சென்று வாங்க. ஒரு சில புதன்கிழமைகளில் ‘ஆனந்த விகடன்’ கிடைக்காது , பால் கிடைக்காத குழந்தை பசியில் அழுவது போல் எனக்குள்ளே சத்தமின்றி அழுவேன்.
அடுத்த நாள் காலை பள்ளிக்கூடம் செல்லும் போதே ‘ஆனந்த விகடனை’ புத்தக மூட்டையில் வைத்து டீ நேரம் , உணவு நேரம் முடிந்து ‘ஆனந்த விகடனில்’ வரும் கதைகள், நேர்காணல்கள் ,கவிதை,ஜோக்ஸ் என்று எல்லாவற்றையும் படித்துக்கொண்டு இருப்பேன்.
பிறந்து 14வயது கடந்து மீண்டும் மறுபிறவி எடுத்தேன்‘ஆனந்த விகடனால்’. பிறக்கும் குழந்தை பிறந்தவுடன் எழுந்து நடப்பதில்லை, ஓடுவதில்லை 2-3 வயதை கடந்து உறவுகள் கை பிடித்து நடக்க கற்றுத்தர வேண்டும். அதுபோல் தான் இலக்கியம் வாசிக்க நல்ல சினிமாக்களை தேடி அழைந்துகொண்டு இருந்த என் 14 வயதில் என்னை கைப்பிடித்துக்கொண்டு இன்று “கண்ணாமூச்சி” என்ற கவிதை தொகுப்பு ,சினிமாவில் தேசிய விறுது வென்ற இயக்குனர் திரு.ராம் (தங்கமீன்கள்) அவர்களோடு உதவி இயக்குனர் ஆக வாய்ப்பு கிடைத்தது ‘ஆனந்த விகடனில்’ வந்த ஒரு தொடரினால் மட்டுமே ,மட்டுமே…
சினிமாவில் உதவி இயக்குனராக எப்படியோ சேர்ந்து விட வேண்டும் என்ற கனவுகளோடு இருந்தேன். தேசிய விறுது பெற்ற் ‘திரு.வெற்றி மாறன்’ அவர்கள் ‘விசாரனை’ படம் வெளி வந்த சமயம் “மைல்ஸ் டூ கோ” என்ற தொடர் ‘ஆனந்த விகடனில்’ எழுதினார் நிச்சயமாக பல இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருந்திருக்கும். எனக்கு ‘மைல்ஸ் டூ கோ’ தொடர் சினிமாவில் நுழைய பெரும் உதவியாக இருந்தது.

‘’மைல்ஸ் டூ கோ”வில் ஒரு தொடரில் ‘திரு.வெற்றிமாறன்’ அவர்கள் ‘திரு.பாலுமகேந்திரா’ அவர்களை கேமிராமேனாக ஒப்பந்தம் செய்ய ஒரு உதவி இயக்குநர் வந்திருப்பார் , அந்த உதவி இயக்குனர் சொன்ன கதையை படமாக எடுத்தால் அந்த திரைப்படம் இந்தியாவிலே’ மிக முக்கியமான படமாக இருக்கும் என்று கூறினார், அந்த உதவி இயக்குனரை புகழ்ந்து பேசி இருப்பர்.
திரு.வெற்றிமாறனுக்கு,திரு.பாலுமகேந்திராவவையே ஆச்சரியப்பட்ட அந்த நபர் யார் அந்த நபரை பார்க்க வேண்டும் என்ற என்னம், ‘திரு.வெற்றிமாறன்’ அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டு உள்ளது.
ஒரு நாள் அந்த உதவி இயக்குனர் ‘திரு.பாலுமகேந்திரா’ அவர்களை பார்க்க வந்துள்ளார், ‘திரு.பாலுமகேந்திரா’வை பார்த்து விட்டு அந்த உதவி இயக்குனர் கீழே செல்லும் போது ‘திரு.வெற்றிமாறன்’ அவர்கள் அந்த உதவி இயக்குனரை நிறுத்தி அறிமுகம் ஆகினார்., திரு.வெற்றிமாறன்’ மற்றும் அந்த உதவி இயக்குனர் இருவரும் டீகடையில் பல மனி நேரங்கள் நல்ல இலக்கியங்கள், சினிமாக்களை பற்றி கதைத்துள்ளனர்.இன்று வரையிலும் இருவரின் நட்பு அப்படியே இருக்கிறது என்று பல நேர்கானல்களிலும் திரு.வெற்றிமாறன்’ அவர்கள் கூறி இருப்பார். ‘திரு.வெற்றிமாறன்’ எந்த வித ஈகோவும் இல்லாமல் பார்த்து பேசி நண்பரானவர் இயக்குனர் ‘திரு.ராம்’ அவர்களே.
’மைல்ஸ் டூ கோ”வில் ‘திரு.வெற்றிமாறன்’ அவர்கள் இந்த தொடரில் திரு.ராமோடு எந்த வித ஈகோவும் இன்றி நட்பாகி கொண்டார். இந்த தொடர் என் ஆழ் மனதில் பதிந்து விட்டது. எனக்குள் நான் சொல்லிக்கொண்டேன் நானும் ஒரு நாள் இது போல் நம்மை விட திறமையானவர்கள், நல்ல தொடர்புகள் கிடைத்தால் அந்த மனிதர்களை நட்பாக்கி கொள்ள வேண்டும் என்ற என்னம் எனக்குள் பதிந்தது.
திரு.திலிப்குமார் (நாடக ஆசிரியர், கவிஞர்) அவர்கள் உதவியோடு என் முதல் கவிதை தொகுப்பு ‘கண்ணாமூச்சி’ பதிப்பான பின்னர் பல இயக்குனர்கள் , எழுத்தாளர்களுக்கு கூரியர் மூலம் அனுப்பி வைத்தேன். இயக்குனர் ‘திரு.ராம்’ அவர்களுக்கு என் கவிதை புத்தகத்தை அனுப்பி வைத்தேன். ‘திரு.ராம்’ அவர்களின் அலுவலகத்தில் இருந்து. ‘ஒரு உதவி இயக்குனர்’ என்னை தொடர்பு கொண்டு எனது கவிதை தொகுப்பை பற்றி பேசினார்.
எனக்கு அப்போது ‘திரு.வெற்றிமாறன்’ அவர்கள் ’மைல்ஸ் டூ கோ”வில் ‘திரு.வெற்றிமாறன்’ மற்றும் ‘திரு.ராம்’ இருவரும் நண்பர்கள் ஆன தொடர் என் நினைவுக்கு வந்தது, என்னை தொடர்பு கொண்ட ‘திரு.ராம்’ அவர்களின் உதவி இயக்குனரின் தொலைப்பேசி எண்னை வாங்கிக்கொண்டேன்.
‘திரு.ராம்’ அவர்களின் உதவி இயக்குனரோடு ’மைல்ஸ் டூ கோ”வில் ‘திரு.வெற்றிமாறன்’ அவர்கள் அறிமுகப்படுத்திய ‘ரூட்ஸ்’ நாவல் வாசித்து இருந்தேன் ‘ரூட்ஸ்’நாவல் எனக்குள் ஏற்ப்படுத்திய தாக்கத்தை பற்றி ‘திரு.ராம்’ அவர்களின் ‘உதவி இயக்குனரோடு’ விவாதித்தேன், திரு.ராம்’ அவர்கள் அவர் அலுவலகத்தில் எல்லா உதவி இயக்குனர்களுக்கு கூறும் இலக்கியங்கள், சினிமாக்கள் பற்றி என்னை தொடர்புகொண்ட ‘உதவி இயக்குனரிடம்’ கேட்டு தெரிந்துகொண்டேன் .

‘பட்டாம்பூச்சி, ‘மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்’, ‘பிரீடம் அட் மிட்நைட்’, ‘இரவு’, ‘வெள்ளையானை’, ‘எமிலி டிக்கின்சன் கவிதைகள்’ என்று இந்த படைப்புகளை படிக்க கூறினார் ‘திரு.ராம்’ அவர்களின் ‘உதவி இயக்குனர்’.
ஒரு 6மாத காலம் கடந்து ‘திரு.ராம்’அவர்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது அவரோடு உரையாடும் போது என்னை தொடர்பு கொண்ட ‘திரு.ராம்’ அவர்களின் ‘உதவி இயக்குனர்’ எனக்கு அறிமுகப்படுத்திய இலக்கியங்கள் பற்றி நான் ‘திரு.ராம்’ அவர்களிடம் கூறினேன், அடுத்த நொடியே என்னை அவரின் உதவி இயக்குனராக சேர்த்துக்கொண்டார்.
வெறும் பேப்பர் – பேனாவால் எழுதப்படும் வார்த்தைகளுக்கு இவ்வளவு வீரியம் உள்ளதா ? என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது, திரு.வெற்றி மாறன்’ அவர்களின் வாழ்க்கை அனுபவம் நான் என் வாழ்வில் என் கனவுக்காக எடுத்து வைத்த முதல் அடி ‘ஆனந்த விகடனால்’ மட்டுமே.
12 வருடம் ஓடி விட்டது எனக்கும் – ‘ஆனந்த விகடனுக்கும்’ ஆன நெருக்கம் என் வீட்டின் ரேசன் கார்டில்தான் இல்லை ‘ஆனந்த விகடன்’ தனி அறையில் எங்கள் குடும்பத்தில் வாழ்ந்து வருகிறது.
‘எனக்கும்’ , ‘விகடனுக்கும்’ ஆன உறவை பற்றி விகடன் கட்டுரை எழுத சொன்ன போது எனக்கு முகம் தெரியாத ‘ஒருவர்’ அறிமுகம் படுத்திய ‘ஆனந்த விகடன்’ எனக்கு பல வாய்ப்புகளை பெற்றுத்தந்துள்ளது. ‘நம்பர்1’ என்ற ‘ஆனந்தவிகடன்’ தொடரில் சாதித்த மனிதர்கள் கடந்து வந்த கடினமான பாதைகள் பற்றிய தொடர், நானும் அது போல் சாதிக்க வேண்டும் என்ற என்னத்தையும் என்னுள் விதைத்தது ‘ஆனந்த விகடனே’.
பல ‘இலக்கியவாதிகள்’, ’திரைப்படஇயக்குனர்கள்’,பல ஆளுமைகள் என்று பல சாதனையாளர்களை உறுவாக்கி இன்னமும் நடை போட்டு வருகிறது இளமையாகவே ‘ஆனந்த விகடன்’.
பல சாதனையாளர்களை உருவாக்கிய ‘ஆனந்த விகடன்’ கைப்பிடித்து தான் நானும் நடந்து கொண்டிருக்கிறேன் ‘ஆனந்த விகடன்’ அட்டை படத்தில் என் முகம் வருவதற்க்கு!
விகடன் இதழுடன் உங்களுக்கு இருக்கும் பந்தம் குறித்து எழுத ஓர் அரிய வாய்ப்பு!
ஏறக்குறைய 100 ஆண்டுகளாக, தமிழ் மக்களின் வாழ்வில் ஒரு நீங்காத அங்கமாக விகடன் திகழ்ந்து வருகிறது. பொழுதுபோக்கு, அரசியல், சமூகச் செய்திகள் எனப் பல தளங்களில் விகடன் வாசகர்களின் எண்ணங்களை வளப்படுத்தி வருகிறது. உங்கள் நினைவுகளிலும், வாழ்க்கைப் பயணத்திலும் விகடனின் பங்கு என்ன? விகடன் இதழ் உங்கள் குடும்பத்தில் ஒருவராய்ப் பார்க்கப்பட்ட தருணங்கள் உண்டா? ஒரு செய்தியோ, ஒரு கட்டுரையோ, ஒரு புகைப்படமோ உங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கம் என்ன?
இப்படியான உங்கள் அனுபவங்களை “விகடனும் நானும்” என்ற தலைப்பில் கட்டுரையாக எழுதி அனுப்பலாம். கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
-
கட்டுரையின் நீளம் 500 முதல் 800 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும்.
-
உங்கள் கட்டுரைகளை my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
