• August 4, 2025
  • NewsEditor
  • 0

முதன்முதலாக நடிகர் அவதாரம் எடுத்திருக்கிறார் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா.

இவர் நடிக்கும் ‘கந்தன் மலை’ படத்தின் போஸ்டர் வெளியாகயிருக்கும் நிலையில், படத்தின் இயக்குநர் வீர முருகனிடம் பேசினோம்.

வீரமுருகன்

“நான் ‘கிடுகு’ படம் எடுத்த போதே ஹெச்.ராஜா சார் எனக்கு அறிமுகம். அந்தப் படத்தை அவருடைய தாமரை யூ டியூப் சேனல்லதான் வெளியிட்டார்.

மதமாற்றம் தொடர்பான கதையைக் கொண்ட அந்தப் படத்துக்கு நாங்க எதிர்பார்த்த சர்க்கிள்ல ஓரளவு ஆதரவு கிடைச்சதுனே சொல்லலாம்.

அந்தப் படத்துக்கு ராஜா சார் ரொம்பவே சப்போர்ட் செய்தார்.

அப்ப இருந்து தொடர்புல இருந்த நிலையில்தான் இந்தக் கதைக்கான ஸ்கிரிப்டைக் கையில் எடுத்தோம். ஸ்கிரிப்டே ராஜா சாருடையதுதான்.

அவர்தான் ஸ்கிரிப்டைக் கொடுத்து ‘இந்தக் கதையை எடுக்கலாம், ரெடி பண்ணுங்க’னு சொன்னார். பெரிய தலைவர், அவருடைய ஆதரவு இருக்கிற போது வேற எதுக்குத் தயங்கணும்? ஆரம்பிச்சு ஷூட்டிங்லாம் எழுபது சதவிகிதத்துக்கு மேல முடிச்சிட்டோம்’ என்றவரிடம் ராஜா நடித்த அனுபவங்களையும் கேட்டோம்.

H. Raja

”ஆதிங்கிற கேரக்டர்ல அதாவது படத்துக்கு ரொம்பவே முக்கியமான கேரக்டர்ல நடிக்கிறார். அதாவது நாயகன் படத்துல கமல் நடிச்சிருப்பாரே அதை மாதிரி வசிக்கிற ஏரியாவுக்கு நல்லது செய்கிற கேரக்டர்.

மதுரை, காரைக்குடி சுற்று வட்டாரத்துல ஷூட்டிங் நடந்தது. அவ்வளவு அழகா ஒத்துழைப்பு கொடுத்தார். ஒரு சீன்ல அவரை எதிரி அடிக்கிற மாதிரி இருக்கும். ஷூட்டிங்கிற்கு அவர் கூடவே வருகிற அவரது கட்சித் தொண்டர்கள் அந்தக் காட்சிக்கு எதிர்ப்பு தெரிவிச்சாங்க.

அந்தச் சமயத்துல ‘நடிக்க வந்துட்டா டைரக்டர் சொல்றதைக் கேக்கணும்ப்பா, எல்லாரும் பேசாம இருங்க’னு அவங்களை அமைதிப்ப‌டுத்தினார்.

அதேபோல படத்துல அவருக்கு ஒரு ஜோடி இருக்காங்க. இதுக்கு ஆடிசன் வைக்கலாம்னு நினைச்சு அவர்கிட்ட கேட்டப்ப, ‘சும்மாவே நம்மை ட்ரோல் செய்வாங்க, இதுல இது வேறயா, சரி படத்துல ஹீரோயின் அவசியம் இருந்தே ஆகணூம்னா நான் சொல்றவங்களைக் கமிட் செய்யுங்க’னு சொல்லி அவருடைய மனைவியையே கூட்டி வந்துட்டார்.

kandhan malai

படத்துல அவங்கதான் அவருக்கு ஜோடியா நடிச்சிருக்காங்க’ என்றவரிடம், படம் தியேட்டரில் வெளியாகுமா அல்லது முந்தைய படம் போலவே யூ டியூப் சேனலா என்றோம்.

‘ராஜா சாருமே இந்தக் கேள்வியை எங்கிட்டக் கேட்டார். ‘படம் வெளியிட முடியுமா’ன்னார். அது பத்தி இனிமேல்தான் முடிவு செய்யணும்’ என்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *